HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கிச்சன் டிப்ஸ்

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR


♥கிச்சன் டிப்ஸ்
♥ஆப்பிள், தேன், ரோஜாப்பூ, குங்குமப்பூ ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து லேசான சுடுநீரில் கலந்து தொடர்ந்து உண்டு வந்தால் சுகப்பிரசவம் கிடைக்கும்.
- ர.உமாராணி, அய்யம்பேட்டை.

♥முருங்கை இலையை வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டால் இடுப்பு வலி போன்ற வலிகள் குறையும்.
- லெட்சுமி மணிவண்ணன், பொரவச்சேரி.

♥நன்றாக பொடி செய்த லவங்கத்துடன் பனை வெல்லத்தை உட்கொண்டால் மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் கடுமையான வயிற்றுவலி குணமாகும்!
- ம.நிவேதா, பனைமேடு, சிக்கல்.

♥கீரை வகைகளை ஒரு துணியால் சுற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். மூன்று, நான்கு நாட்களுக்கு அது புதிது போலவே இருக்கும். கொண்டைக்கடலையை ஊற வைக்க மறந்துவிட்டால், கொதிக்கும் வெந்நீரை ஒரு ஹாட்பேக்கில் ஊற்றி அதில் கொண்டைக்கடலையை ஊற வைத்தால் ஒரு மணி நேரத்தில் நன்றாக ஊறிவிடும்.
- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி, திருச்சி-15.

♥வாழைத்தண்டு பொரியல் சமைக்கும்போது ஒரு ஸ்பூன் பச்சரிசி, ஒரு ஸ்பூன் உளுந்து, நான்கு மிளகு, ஒரு மிளகாய் வற்றல் இவற்றை வறுத்துப்பொடி செய்து தூவி, கிளறி இறக்கினால் சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்.
- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

♥காலிஃப்ளவர் வேக வைக்கும்போது அதில் சிறிது பாலை விட்டால், பூவில் உள்ள அழுக்கு, கசடு போன்றவை மேலே வந்துவிடும். அதைச் சுலபமாகக் கரண்டியால் அப்புறப்படுத்தி விடலாம்!
- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி, திருச்சி-15.

♥காரப் பொரியலில் காரம் தூக்கலாகி விட்டதா? கவலை வேண்டாம். இரண்டு கசகசாவை மிக்ஸியில் தூளாக்கி காரப் பொரியலில் தூவி விடுங்கள். காரம் போயே போச்சுதான்.
- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

♥அறுகம்புல்லில் சாறு எடுத்துச் சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடலாம். அந்தச்சாற்றில் தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிகம் உள்ளன.
- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு.

♥பாகற்காயை வதக்கும்போது அதில் சிறிது எலுமிச்சைச்சாறு பிழிந்தால் கசப்பு குறைந்து சுவையாக இருக்கும். சாம்பாரை அடுப்பில் இருந்து இறக்கிய பின்பு தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை தாளித்து சேர்த்தால் சாம்பாரின் சுவை அதிகரிக்கும். குலோப் ஜாமூன் செய்துவிட்டு மீதமுள்ள சர்க்கரை பாகில் நெய்யில் பிரெட்டை ரோஸ்ட் செய்து போட்டால் புதுவிதமான ஸ்வீட் தயார்.

- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி

Post a Comment

0 Comments